Screen Reader Access     A-AA+
அருள்மிகு திருமலைக்குமாரசுவாமி திருக்கோயில், பண்பொழி - 627807, தென்காசி .
Arulmigu Thirumalaikumaraswamy Temple, Panpoli - 627807, Tenkasi District [TM037836]
×
Temple History

தல வரலாறு

திருமலைக்குமாரசுவாமி திருக்கோயில் அமைந்துள்ள மலைக்குன்றானது நாநூறு அடி உயரத்துடன் ஓம் வடிவில் அமைந்துள்ளது. கேரளாவின் பந்தளம் அரசர், சொக்கம்பட்டி ஜமீன்தாா், சிவகாமி பரதேசி அம்மையார் ஆகியோர் இத்திருக்கோயில் கட்டப்பட்டு வளர்ச்சி பெற பெரும் பங்காற்றியுள்ளதாக சொல்லப்படுகிறது. சிவகாமி பரதேசி அம்மையார் தனது பெரும் முயற்சியின் காரணமாக ஏராளமான நன்செய், புன்செய் நிலங்களை நீதிமன்றம் மூலமாக ஆக்கிரமிப்புகளிலிருந்து மீட்டு திருக்கோயில் வசம் ஒப்படைத்தார் என்றும் சொல்லப்படுகிறது.

இலக்கிய பின்புலம்

அருணகிரிநாதர் தாம் இயற்றிய திருப்புகழில் சுவாமி திருமலை முருகனை புகழ்ந்து பாடியுள்ளார். தண்டபாணிசுவாமிகள் கவிராசபண்டாரத்தையா ஆகியோர் திருமலைக் குமரனை புகழ்ந்து பாடிய முக்கிய புலவர்கள் ஆவர். மேற்படி இருவரும் திருமலைக் குமரனை புகழ்ந்து திருமலைக் குமரன் பிள்ளைத்தமிழ், திருமலை முருகன் குறவஞ்சி, திருமலை முருகன் நொன்டி நாடகம், திருமலை கருப்பன் காதல், திருமலை முருகன் அந்தாதி, திருமலைக்குமாரசுவாமி அலங்கார பிரபந்தம், திருமணிமாலை திருத்தாலாட்டு ஆகியவற்றை இயற்றியுள்ளனர்.

புராண பின்புலம்

திருநெல்வேலி மாவட்டம், செங்கோட்டை வட்டம், பண்பொழி அருகேயுள்ள திருமலை மலைமீதுள்ள காளியம்மன் கோயில் அர்ச்சகரான பூவன்பட்டர் என்பவர் நண்பகல் வேளையில் வழிபாடு முடித்து புளியமரத்தடியில் கண்ணுறங்கி உள்ளார். அப்போது அவர் கனவில் முருகன் தோன்றி தாம் கோட்டை திரடு கோட்டையில் புதர்கள் மண்டிய பகுதியில் மறைந்து கிடப்பதாகவும் தான் இருக்குமிடத்தை கட்டெறும்புகள் வழி காட்டும் என கூறி மறைந்துள்ளார். இச்செய்தியை பந்தள அரசர் கனவிலும் முருகன் தோன்றி தெரிவித்துள்ளார். சேர நாட்டிலிருந்து பந்தள அரசர்கள் வர, பூவன்பட்டர் அவர்களை எதிர்கொள்ள அனைவரும் கோட்டைதிரட்டிற்கு சென்று கட்டெறும்புகள் காட்டிய வழியில் போய் புதருக்குள் மறைந்து கிடந்த முருகப் பெருமானை எடுத்து வந்துள்ளார்கள். வெள்ளத்தாலும், பகைவராலும், அழிவு...