தமிழ்நாடு மாநிலம், தென்காசி மாவட்டம், செங்கோட்டை வட்டம், பண்பொழி ஊரின் மேற்கே 3 கி.மீ தொலைவில் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் 400 அடி உயர அழகிய குன்றின் மீது அமைந்துள்ளது. திரு என்ற சொல்லுக்கு அழகு என்றும், திருமகள் வாசம் செய்யும் இடம் என்றும் பொருள் உண்டு. இத்திருமலை மீது குமரப்பருவத்தில் தமிழ்மொழிக் கடவுளான முருகபெருமான் எழுந்தருளியிருப்பதால் திருமலைக் குமாரசுவாமி எனப் பெயர் கொண்டுள்ளார். அருள்மிகு திருமலைக்குமாரசுவாமி திருக்கோயிலானது விசாக நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்காக தமிழ்நாட்டில் உள்ள ஒரே பிரார்த்தனை ஸ்தலமாக உள்ளது.